கடலூர்: திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதியில் அமைந்துள்ள இந்த வெலிங்டன் கால்வாயானது. 100 ஆண்டுகள் பழமையான கால்வாய்யாகவும் இந்த வெலிங்டன் கால்வாயை சீரமைக்க தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டலின் கடந்த ஜனவரி மாதம் கடலூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுருந்தார். அதன் பின் திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதியில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன்படும் வகையில் ரூ.130 கோடி செலவில் வெலிங்டன் ஏரிக்கரைகளை பலப்படுத்துவதை வாய்க்கால்களை புராணமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளபடும் என்று முதலமைச்சர் முகஸ்டலின் அறிவித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசானது தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி கால்வாய்யின் கறைகளை சீரமைக்க ரூ.74 கோடிக்கு முதன்மை கால்வாயை சீரமைக்க 20 கோடி உபரி நீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க 36 கோடி என்று 130 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.