Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம் தேடப்பட்டவர் ஹிட்மேன் ரோகித், `கிங்’ கோஹ்லியை முந்திய `பிரின்ஸ்’ வைபவ்! `மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சி

துபாய்: 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடி 14 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஆடிய ஐக்கிய அரபு அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்து 234 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடந்த மாதம் இளையோர் ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி 32 பந்துகளில் சதம் அடித்தார்.

2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தவர்களில் இந்திய அளவில் கிரிக்கெட் வீரர்களில் முதல் இடம் பிடித்து ஆச்சர்யபடவைத்திருக்கிறார் வைபவ். மேலும் கோஹ்லி, ரோகித், டோனியை பின்னுக்கு தள்ளி அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதலிடம் பிடித்திருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து வைபவ் கூறுகையில், ``இதுபோன்ற விஷயங்களில் நான் அதிகம் கவனம் செலுத்துவது கிடையாது.

ஆனால் நடப்பு ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் என்ற செய்தியை கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என் எண்ணம் முழுவதும் கிரிக்கெட்டை சுற்றியே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடுவது தான் எனக்கு முக்கியம். என் தவறை திருத்தி, ஒவ்வொரு போட்டிகளிலும் என்னை மெருகேற்றி கொள்ள விரும்புகிறேன்’’ என்றார். 2025ம் ஆண்டில், கூகுலில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் 6வது இடத்தை சூர்யவன்ஷி பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.