சென்னை: நடப்பாண்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவாக உள்ளதாக அண்ணாமலை பழைய தரவுகளை கூறுகிறார். மாணவர்களின் நலன் கருதி அண்ணாமலை கருத்து தெரிவித்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அரசுப் பள்ளிகள் என்பது சேவை அடிப்படையில் செயல்படக்கூடியவை. பள்ளியில் 4 மாணவர்கள் இருந்தாலும் கட்டடம் கட்டுவோம்; ஆசிரியர்களை நியமிப்போம் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement