திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மூலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் நன்னிலம் பகுதியில் இயங்கி வரும் விக்ரம் என்பவருக்கு சொந்தமான தனியார் பால் நிறுவனத்தில் பால் பாக்கெட்டுகளை ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு நன்னிலத்திலிருந்து கூத்தாநல்லூர் வரை சென்று கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் ரமேஷ்குமார் பால் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு கூத்தாநல்லூர் கடைகளில் விற்பனை செய்துவிட்டு மீண்டும் நன்னிலம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது விளமல் ஆயுதப்படை மதித்தனம் அருகில் ஆம்னி வேனில் பின்பக்கத்தில் புகை வருவதாக அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ரமேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆம்னி வேன் திடீரென தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை கண்ட ரமேஷ்குமார் வண்டியை நிறுத்தி கீழே இரங்கி உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் வாகனம் முழுவதும் தீ பற்றி எரிந்து தீக்கரையானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.