திருவாரூர்: திருவாரூர் அருகே காதலி கண்முன்னே கோயில் குளத்தில் குதித்த காதலன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). இவர் BBA முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டா கிராம் மூலம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ (19) என்பவருடன் பழக்கமாகி இருவரும் காதலித்து வந்த வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பிரவீன்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஜெயஸ்ரீயை வற்புறுத்தி உள்ளார். இது குறித்து இருவரும் திருவாரூர் அருகே உள்ள விநாயகர் கோவில் எதிரில் உள்ள குளத்தின் கரையில் நின்று பேசி கொண்டிருந்தனர். வீட்டில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக காதலி கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஜெயஸ்ரீ முதலில் குதித்ததாகவும், பிரவீன் குமார் அவரை காப்பாற்ற குளத்தில் குதித்து முயற்சி செய்த போது உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சியில் முதலில் காதலன் பிரவீன்குமார் குளத்தில் குதித்து தற்கொலை செய்ததாகவும், ஜெயஸ்ரீ குளத்தில் குதித்து தேடுவதும் பதிவாகியுள்ளது.
இதை அடுத்து அப்பகுதியினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியது. காதலன் மட்டுமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தற்போது பிரவீன்குமார் உடல் திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குடவாசல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
