திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஜான் ஆண்ட்ரூஸ்(48) என்பவர் உயிரிழந்தார். புதுசாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான் ஆண்ட்ரூஸ்(48) ரேபிஸ் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான் ஆண்ட்ரூஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தெருநாய் கடியால் 10,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
+
Advertisement