திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நடிகை ஒரு சில மலையாளப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் எர்ணாகுளத்தில் ஒரு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு வந்தார். இவர் செல்ல வேண்டிய ரயில் அடுத்த நடைமேடையில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த அருண் (32) என்ற ரயில்வே போர்ட்டர், அந்த நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி எளிதில் அடுத்த நடைமேடைக்கு செல்லலாம் என்றும், அதற்கு, தான் உதவுவதாகவும் அந்த நடிகையிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சம்மதித்தார். தொடர்ந்து அவரிடம் இருந்து பேக்கை வாங்கிய போர்ட்டர் அருண், ரயிலில் ஏறும்போது அந்த நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின்பேரில் அருணை போலீசார் கைது செய்தனர்.
