சென்னை: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2026ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2025ம் ஆண்டுக்கான 73 விருதுகளுக்கு தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் விருது (2026), பாரதியார் , பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம், காமராசர், அண்ணா, கலைஞர், இலக்கிய மாமணி, தமிழ்த்தாய், கபிலர், உ.வே.சா., கம்பன், சொல்லின் செல்வர், உமறுப் புலவர், ஜி.யு. போப், இளங்கோவடிகள், அம்மா இலக்கிய, சிறந்த மொழி பெயர்ப்பாளர், ‘சிந்தனைச்சிற்பி’ சிங்காரவேலர், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகளார் , வள்ளலார், காரைக்கால் அம்மையார், சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் , தமிழ்ச் செம்மல் விருது என மொத்தம் 74 விருதுகள் வழங்கப்படுகிறது.
அறிஞர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற இணைய தளங்கள் அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக 3.9.2025ம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.