திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரயில்கள் இயக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


