*உலர் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்
திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் குறுவை சாகுபடி அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் 12ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் திருத்துறைப்பூண்டி விவசாயிகள் குறுவை சாகுபடியினை ஆண்டுதோறும் அதிகப்படுத்தி விடுகின்றனர்.
இந்த ஆண்டு 19238 ஆயிரம் ஏக்கரில் குறுவைசாகுபடி விவசாயிகள் செய்து இருந்தனர், தற்போது அறுவடை வந்த நிலையில் பல இடங்களில் மழையில் கதிர்கள் சாய்ந்து விட்டது.
மேலும் தற்போது அறுவடை விறுவிறுப்பாக நடைபெறுகிறது, நெல் கொள்முதல் செய்வதற்கு தாலுக்கா முழுவதும் 40 க்கு மேற்றப்பட்ட இயங்களில் அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது, மேலும் தற்போது நெல்லின் ஈரப்பதம் 20, 22 சதவிதமாக உள்ளது. ஆனால் 17 சதவீதம் வரை உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது, தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்பை ஏற்ப்படுத்தும் எனவே நெல் ஈரபதம் பார்க்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.