Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 5 பேர் ஆஜர்!!

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 5 பேர் ஆஜராகியுள்ளனர். அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார், கோயில் காவலாளிகள் பிரவீன் குமார், வினோத் குமார், மேலும் அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகேயன், ஆட்டோர் ஓட்டுநர் அருண்குமாரும் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். அஜித்குமார் மரண வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராஜாவின் 2 செல்போன்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் மரண வழக்கில் ஏற்கெனவே 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.