சென்னை: அ.ம.மு.க., செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், திருப்போரூர் சட்டசபை தொகுதி சார்பில், தண்டலத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோதண்டபாணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி., தினகரன் பங்கேற்று பேசியதாவது: அமமுக 2026ம் ஆண்டு தேர்தலில் உறுதியான சரியான கூட்டணி அமைக்கபோகிறது.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் கோதண்டபாணியைத்தான் வேட்பாளராக நிறுத்தப்போகிறோம். பொறுமையாக இருங்கள் நாம் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், திருப்போரூர் ஒன்றிய செயலர் வேலு, மாவட்ட இணைச்செயலர் மாலா ரவிச்சந்திரன், உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.