2014ன் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது: அமைச்சர் ரகுபதி பேட்டி
சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது. தமிழர்கள் கொண்டாடக் கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை. தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது காலூன்ற வேண்டும் என மதவாத சக்திகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். 2014ன் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
2014இல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது. 2014ன் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு. 2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ன உத்தரவு பிறப்பிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பாஜகவுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி என்றும் கூறினார்.

