திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோயில் நிர்வாகம் உத்தரவை நிறைவேற்றாததால்தான் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதி யாரையும் தண்டிக்கவில்லை; வழக்கு நிலுவையில்தானே உள்ளது? என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் மேல்முறையீடு மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

