மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆட்சியர், கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோரை ஆஜராக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனு. தலைமைச் செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகின்றன.
+
Advertisement


