திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துண் கோயிலை காட்டிலும் பழமையானது அல்லவா?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள்
மதுரை: தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய அரசு வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது ஐகோர்ட் கிளை விசாரணை நடத்தி வருகிறது. ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக அரசு தரப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடக்க நிலையிலேயே நீதிபதியும் நீதிமன்ற அவமதிப்பு நடந்துவிட்டதாக முடிவுக்கு வந்துவிட்டார். நீதிமன்ற அமைப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது. தனி நீதிபதி விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மனுவை விசாரணைக்கு எடுத்துவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை அரசுத் தரப்பு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துண் கோயிலை காட்டிலும் பழமையானது அல்லவா என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

