சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சளி மற்றும் இருமல் பிரச்னை காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.