Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் : திருமாவளவன் சபதம்

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், " இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் அமைத்து கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவிற்கே முன்மாதிரி ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டியல் இன மக்களின் கல்வி வளர்ச்சி விகிதம் 1.5 சதவீதம்தான். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் வளர்ச்சி விகிதம் 78% ஆக உயர்ந்துள்ளது. விளிம்புநிலை மக்களை மேம்படுத்த கலைஞர் வழியில் திட்டங்களை செயல்படுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டு உள்ளது. மக்கள் நலன்களில் அக்கறை செலுத்தும் அரசு திராவிட மாடல் அரசு. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90%க்கும் மேல் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. நடப்பாண்டு அயல்நாட்டில் பயில விண்ணப்பித்த அனைவருக்கும் நிதி கிடைக்க வேண்டும்.

விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் கிடைத்திட, மேலும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். தோழமை கட்சிகளை எல்லாம் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார் முதலமைச்சர். ஓரணியில் தமிழ்நாடு, திமுக அணியில் தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய உறுதுணையாக விசிக இருக்கும். திராவிட மாடல் அரசு அமைய அனைத்து தமிழர்களும் ஓரணியில் இணைய வேண்டும். திமுக கூட்டணிக்கு விழும் கொத்து கொத்தான வாக்குகளில் 25% வி.சி.க. வாக்குகளாக இருக்கும்."இவ்வாறு தெரிவித்தார்.