திருமங்கலம் பகுதியில் 7ஆம் வகுப்பு மாணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: 2 இளைஞர்கள் கைது
சென்னை: திருமங்கலம் பகுதியில் 7ஆம் வகுப்பு மாணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை திருமங்கலம் பகுதியில் இயங்கிவரும் பிரபல பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் போதையில் தள்ளாடியபடி வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரணை செய்தபோது அந்த மாணவன் தனது பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அந்த சிறுவனை அழைத்து சென்று மதுபோதைக்கு ஆளாக்கி வந்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் சிறார் உதவி எண்களுக்கு புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சிறுவனை மீட்டு விசாரித்தபோது பள்ளியில் பயின்று வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழைத்து சென்று விசாரித்த நிலையில், அந்த சிறுவன் அதே பகுதியில் இருந்து 2 இளைஞர்கள் தன்னையும் மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனையும் அழைத்து சென்று மதுபோதைக்கு அளக்கியுள்ளதாகவும், போதைப்பொருட்கள் தங்களிடம் கொடுத்து தங்களை ஆபாசமாக துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


