*வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
திருவிடைமருதூர் : திருமங்கலக்குடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.திருவிடைமருதூர் அருகே உள்ள திருமங்கலக்குடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தெற்கு வீதியில் குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பிரேம்குமார், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன், தேமுதிக மாவட்ட செயலாளர் ப.சுகுமார் மற்றும் ராஜமன்னார், செல்வம், கிருஷ்ணன், சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, குழாய் பதிப்பதற்கு மாற்று வழியை ஒரு வாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும். மாற்று வழி கிடைக்காத பட்சத்தில் அதே இடத்தில் குழாய்கள் பதிக்க நேரிட்டால், அதனால் ஏற்படும்இழப்பீட்டை குழாய் பதிப்பவர்கள் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.