திருச்செங்கோடு நீதிமன்றம் அருகே லாரி தீப்பிடித்தது: பெட்ரோல் பங்க் அருகே லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே லாரி தீப்பிடித்து எரிந்ததால் இருசக்கர வாகனம் சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக சுமார் ஒரு மணிநேரம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பக்கத்தில் பெட்ரோல் பங்க் அருகே ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது போது லாரியில் இருந்த பேட்டரி திடீர் வெடித்ததால் டீசல் டேங்க் தீப்பிடித்து டயர், லாரி எரிந்துள்ளது. மேலும் லாரி பிளைவுட் போட்டு இருந்ததால் வேகமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. வாகனம் எல்லாம் மாற்ற பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது. பொதுமக்களே தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இதற்கிடையே திருச்செங்கோடு காவல் துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயை அணைத்தனர். இந்த லாரி பிளைவுட் லோடு ஏற்றி மகாராஷ்டிரா செல்வதற்காக வந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சிதம்பரம் லாரி என விசரணியில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள லாரி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
