திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி பொருத்தியதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
சென்னை: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சிசிடிவி பொருத்தியதை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சிசிடிவிக்களை அகற்ற கோரி ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், கருவறையில் உள்ள மரகதலிங்கத்தை பாதுகாக்கவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், மண்டபத்தில் தரிசனம் செய்யும் வாயிலை நோக்கியே சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் கோயில் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோயில் செயல் அலுவலரின் பதிலை ஏற்று வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.