மார்த்தாண்டம்: கேரள மாநிலம் கொல்லம் பெரும்புழா பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். இவர்களுடன் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவியும் வந்திருந்தார். அவர்கள் குடும்பத்துடன் திற்பரப்பு அருவியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மது போதையில் குளித்து கொண்டிருந்தார். அந்த வாலிபர் திடீரென அருவியில் குளித்து கொண்டிருந்த மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். அருவியில் குளித்து கொண்டிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசெல்வம் (32). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவி தரப்பில் மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார். மாரிசெல்வத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.