சென்னை: கோவையிலிருந்து பயணிகள் விமானத்தில் செங்கோட்டையன் நேற்று இரவு சென்னை வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ‘அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று நீங்கள் விடுத்த கெடு, 2 நாளில் முடிய உள்ளதே’ என்ற கேள்விக்கு, ‘நல்லதை நினையுங்கள். நல்லதே நடக்கும்’ என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திப்பீர்களா? என்றதற்கு, இதுவரை சந்திக்கவில்லை. அவர்களும் சந்திக்க, என்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், உங்களை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கினால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, அமைதியாக இருப்பேன் என்று கூறிவிட்டு சென்றார்.
+
Advertisement