*கலெக்டர் அதிரடி நடவடிக்கை
கலவை : திமிரி அடுத்த பழையனூர் கிராமத்தில் கலெக்டர் சந்திரகலா நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி அருகே கழிவுநீர் கால்வாயில் கழிவு நீர் செல்லாமல் தேங்கி இருந்ததை பார்த்து ஆய்வு செய்தார்.
அப்போது கழிவு நீரில் கொசுக்கள் அதிகமாக பரவி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். உடனடியாக ஒரு மணி நேரத்தில் கழிவுநீர் கால்வாய் குளம் போல் உள்ளதை சீரமைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, ஜேசிபி இயந்திரம் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில் கலவை தாசில்தார் சரவணன், திட்ட இயக்குனர் சரண்யா தேவி, மண்டல துணை தாசில்தார் செல்வக்குமார், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகம்மது சைப்புதீன், சித்ரா, வருவாய் ஆய்வாளர் நடராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.