மதுரை: தேரூர் பேரூராட்சி அதிமுக முன்னாள் தலைவர் சாதி சான்றிதழை ரத்து செய்த தனிநீதிபதி உத்தரவை உறுதி செய்த ஐகோர்ட் கிளை, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. சாதி சான்றிதழை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமுதராணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை தழுவி உள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபணமாகி உள்ளது. ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவது என்பது அடிப்படை உரிமை என்றும், தனது புதிய அடையாளத்தை மறைத்து, பழைய நிலை தொடர்வது போல காட்டி அரசமைப்பு தந்த உரிமைகளை அனுபவிக்க நினைக்கும்போதுதான் சிக்கல் எழுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
+
Advertisement