Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேனிக்காரர் பின்னால் போனவர்கள் எல்லாம் குழப்பத்தில் தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தலுக்கு தேர்தல் செலவு செய்த குக்கர் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருத்தர் கட்சித்தாவ தயாராயிட்டாராமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சியைச் சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளர் மாற்றுக்கட்சிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்றாங்க.. குக்கர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு மன்னர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொஞ்ச நாள் கழித்து மூன்று மாவட்டமாக பிரித்து இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி கட்சி சார்பில் மாவட்டமாக பிரிக்கப்பட்டது.. இந்த மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டாங்க.. இதில் ஒரு மாவட்ட செயலாளர் மாற்று கட்சிக்கு செல்ல திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவருது.. தொடர்ந்து தேர்தலில் செலவு செய்ததால், அதனை சரிகட்ட தற்போது ஆளும் கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம்.. வீரமான பெயர் கொண்டவர் அந்த மாவட்ட செயலாளர். இதை தான் நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்து வருகிறோம் என்று உறவினர்களும் சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாமும் தனி மரமா ஆகிடுவோமோ என்ற குழப்பத்தில் இருக்கும் ஆதரவாளருங்க யாரு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்துல மலராத கட்சியோட கூட்டு அணியில இருந்த தேனிக்காரரை மலராத பார்ட்டியோட தலைமை கண்டும் காணாமல் கழட்டிவிட்டுட்டு.. இதனால் அதிருப்தியடைஞ்ச தேனிக்காரர், கூட்டு அணியில இருந்து விலகிவிடுறதாக அறிவிச்சாரு.. ஏற்கனவே சேலத்துக்காரர் பின்னால் ஒட்டிக் கொண்டு இருந்த தொண்டர்களை சமாதானம் செய்து விரைவில் அனைவரும் ஒன்றாக இணைந்து விடுவோம்னு சொல்லி வந்தாரு.. அதோட நமக்கு டெல்லி மேலிடம் இருக்குதுன்னு கூறி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாரு.. எப்படியாவது இல பார்ட்டியில மீண்டும் இணைஞ்சிடுவோம்னு தொண்டர்களும் நம்பிக் கொண்டிருந்தாங்க.. ஆனா, இப்ப கூட்டு அணியில் இருந்து வெளியேறிவிட்டதால, தேனிக்காரர் பின்னாடி போனவங்க எல்லாம் தேனிக்கார அண்ணன் எந்த பக்கம் போறதுன்னு ஒரு முடிவு எடுக்காம இருக்குறதால, அண்ணனை போலவே நாமும் தனிமரமாக ஆகிடுவோமுன்னு ஆதரவாளருங்க ரொம்பவே குழப்பத்துல இருக்காங்களாம்.. இதனால எலக்‌ஷனுக்கு முன்னாடியே வேற கட்சிக்கு தாவிடலாம்னு யோசனை செஞ்சி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சி தலைவர்களை சந்திப்பதில் இருந்து திடீரென பலாப்பழக்காரர் பின்வாங்கியது எதுக்காம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சேலத்துக்காரரின் கறார் நடவடிக்கையால் மலராத கட்சி தலைமை பலாப்பழக்காரரை ஒதுக்கி வந்தது. ஒரு கட்டத்தில் தனக்கு சந்திக்க வாய்ப்பு வழங்க வேண்டுமென கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக பலாப்பழக்காரர் அறிவிச்சிட்டாரு.. அதன்பிறகு மலராதக் கட்சி மாநில தலைமையை விமர்சித்தும் பேசி வந்தார். ஆனால், குக்கர்காரரோ இதற்கு நேர்மாறாக பேசி வருகிறார். நானும், பலாப்பழக்காரரும் மலராத கட்சி கூட்டணியில் தான் நீடித்து வருகிறோம் என பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வருகிறாராம்.. விரைவில் மலராத கட்சியின் தேசிய பிரமுகர்கள் தமிழ்நாட்டிற்கு வர உள்ளார்களாம்.. அவர்களை சந்திக்க மலராத கட்சி கூட்டணி சார்பில் ஏற்பாடு நடந்து வருகிறதாம்.. இதுகுறித்து பலாப்பழக்காரர் ஹனிபீ மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளாராம்.. அப்போது அனைவரும் சேர்ந்து ஒரே பதிலை கூறி இருக்காங்க.. சேலத்துக்காரர் உங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.. கடைசி நேரத்தில் உங்களை அசிங்கப்படுத்தி விடுவார்.. அதை மனதில் வைத்து இப்போதே நீங்கள் தெளிவாக முடிவெடுக்க வேண்டுமென கூறி இருக்காங்க.. இதனால்தான் தனது முடிவில் இருந்து பலாப்பழக்காரர் பின்வாங்கியுள்ளார் என்கின்றனர் ஹனிபீ மாவட்ட ஆதரவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டாக்டர்களுக்கு போஸ்டிங்கோட ஜாக்பாட் பரிசும் கிடைச்சிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் கார்ப்பரேசனில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருது.. இங்கு டாக்டர்கள் போஸ்டிங் காலியாக இருந்ததால் சமீபத்தில சென்னையில் இருந்து 5 பேரை புதுசா நியமனம் செய்தார்களாம்.. டாக்டர்கள் பதவியிடத்திற்கு வந்த 5 பேருக்கும் ஜாக்பாட் பரிசாக மண்டலத்தில் உள்ள சுகாதார நிலையங்களை கண்காணிக்கும் பொறுப்பும் கூடுதலா கிடைச்சிருக்கு.. தங்களது மண்டலத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டேட்டா என்ட்ரி உள்பட பிற வேலைகளுக்கு அவுட் சோர்சிங் மூலமா ஆட்கள் எடுக்கும் வேலையை தொடங்கி இருக்கிறார்களாம்.. இதை பயன்படுத்தி 5 பேரும் நல்லா கல்லா கட்டி வருகிறார்களாம்.. ஒரு போஸ்டிங்கிற்கு பல பேர்கிட்ட பணம் வாங்கி இருக்கிறார்களாம்.. கூடிய சீக்கிரம் இந்த விவகாரம் வெடிக்கும்னு கார்ப்பரேசன் ஹெல்த் டிபார்ட்மெண்டில் பேச்சு பரவலா ஓடிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி அலுவலகம் அருகேயே குக்கர் கட்சி அலுவலகத்தை திறந்து மாஜி அமைச்சருக்கு ஷாக் கொடுத்திருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் குக்கர் கட்சி மாவட்ட அலுவலகம் இலை கட்சி மாவட்ட அலுவலகத்திற்கு அருகிலேயே திறக்கப்பட்டிருக்கு.. இதனால் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம்.. மாவட்டத்தில் குக்கர் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் இலை கட்சியில் சேர்த்து விட்டேன் என சேலத்துகாரரிடம் சில தினங்களுக்கு முன்னதாக கூறிவந்த சமயத்தில் இலை கட்சி அலுவலகம் அருகே குக்கர் கட்சி அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் ‘ மணியானவர்’ சேலத்துக்காரரிடம் என்ன பதில் சொல்றது என தெரியாமல் அப்செட்டில் இருக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.