மும்பை: தொடர்ந்து 5வது நாளாக சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை 0.68% குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 556 புள்ளிகள் சரிந்து 81,160 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 167 புள்ளிகள் சரிந்து 24,891 புள்ளிகளில் வர்த்தகமானது. டிரென்ட், பவர் கிரிட், பங்குகள் தலா 3%, டாடா மோட்டார்ஸ் பங்கு 2.7%, டிசிஎஸ் பங்கு 2.5%, ஏசியன் பெயின்ட்ஸ், என்.டி.பி.சி. பங்குகள் தலா 2%, அதானி போர்ட்ஸ் பங்கு 1.7% விலை குறைந்து கைமாறின.
பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்செர்வ், ஹெச்.சி.எல்.டெக்., எம்&எம், எட்டர்னல் பங்குகள் விலை குறைந்தன. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 4,330 நிறுவன பங்குகள் 2,703 நிறுவன பங்குகள் விலை குறைந்தன. 1,473 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம்; 154 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.