உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் குமரலிங்கம் ராஜவாய்க்கால் சர்க்கார் கண்ணாடிபுத்தூர் வாய்க்கால் சோழமாதேவி வாய்க்கால் மடத்தூர் கணியூர் கடத்தூர் வாய்க்கால்கள் மூலம் பாசன நிலங்களுக்கு செல்கிறது.குமரலிங்கம் ராஜவாய்க்கால் பகுதியில் சுமார் 1350 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பெரும்பாலும் விவசாயிகள் தென்னை கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த வாய்க்காலில் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து கால்வாய் தெரியாத அளவுக்கு மூடியுள்ளது. இதனால் பாசன பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் செல்வதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.உடனடியாக வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement