Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போடி அருகே கொட்டகுடி ஆற்றில் குளித்த வங்கி ஊழியர், நண்பர் மாயம்: 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

போடி: போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் குளித்தபோது, அடித்துச்செல்லப்பட்ட வங்கி ஊழியர், அவரது நண்பரை தேடும் பணி இன்று 2வது நாளாக தொடர்கிறது. தேனி மாவட்டம், போடியில் உள்ள பெரியபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர் (47). நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை கேஷியர். இவரது நண்பர் மதுரை வாகைக்குளம் பகுதியை சேர்ந்த மஸ்ஜித் (52). இவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று போடி அருகேயுள்ள குரங்கணிக்கு சென்றார். அங்கு கொட்டகுடி ஆற்றில் இறங்கிச்சென்று சொக்கன்கேணியில் 7 பேரும் குளித்தனர். அப்போது, ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் 7 பேரும் நீந்தியவாறு மறுகரைக்கு செல்ல முயன்றனர். ஆனால், இடையில் பெரிய பாறைகள் இருந்ததால் சிரமம் அடைந்தனர்.

அப்போது, ஜஹாங்கீர், மஸ்ஜித் ஆகிய இருவரும் ஆற்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த சகநண்பர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், 5 பேரும் மிகுந்த சிரமத்திற்கு இடையே நீச்சலடித்து கரைசேர்ந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் போடி தீயணைப்பு துறையினர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர். சுமார் 2 மணி நேரம் தேடுதல் பணி நடைபெற்றது. ஆதன்பிறகு இருள்சூழ தொடங்கியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமையில் 2வது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. வங்கி கேஷியர் உட்பட இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.