Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி: 8 கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: ஆந்திரா தமிழகம் உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் தொடர்ச்சியாக விட்டுவிட்டு பெய்துவரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் ஆழம் மொத்தம் ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி வரத்தால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரதானது அதிகரித்துவருகின்றது.

இன்று காலை நிலவரப்படி 2010 கனடியானது நீர்வரத்து வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது அது 2200 கனடியாக அதிகரித்தது. இதனால் அணையின்பாதுகாப்பு கருதி கதவணைகள் 7:10 மணியில் இருந்து தற்போது நிலவரப்படி 700 கனடி உபரிநீரானது கொசைத்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இந்த நீரானது தாமரை பாக்கம் அணைக்கட்டில் சேர்க்கவைத்து அது சோழவரம் ஏரிக்கு திருப்பிவிடப்படுகின்றது. இதன் காரணமாக தாமரை பாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள அம்மணம்பாக்கம் மற்றும் ஆயில்சேரி எருமைவெட்டிப்பாளையம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுருந்தது.

இந்த கிராமமக்கள் ஆற்று பகுதியில் குளிக்கவோ, இறங்கவோ, மீன்பிடிக்கவோ, செல்ல கூடாதென மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரிக்கையானது விடுத்து இருக்கிறார். மேலும் நீர் வரத்து ஏரிக்கு அடியில் இருக்கக்கூடும் என்பதால் நீர்வெளியேற்றமும் அதிகரிக்கபட வாய்ப்பு இருப்பதாக நீர்வரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.