Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா தேரோட்டம் கோலாகலம்: நாளை மறுநாள் தபசுக்காட்சி

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருநாள் ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் கோமதிஅம்பாள் காலை தினமும் 9 மணிக்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 9 ஆம் திருநாளான இன்று (செவ்வாய்) தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி கோமதி அம்பாள் அதிகாலை 5 மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து காலை 10.30 மணிக்கு பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருநாள் நாளை மறுநாள் 7ம்தேதி (வியாழன்) நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணனராகவும், இரவு 11.30 மணிக்கு மேல் சங்கரலிங்கமாகவும் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, அறநிலையத்துறை உயர்மட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, ஆர் டி ஓ கவிதா, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன்,

திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் எம்ஜிஎம் நாராயணன், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு உறுப்பினர் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் சாம் கிங்ஸ்டன், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, திமுக நகர செயலாளர் பிரகாஷ், மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், நகைக்கடை அதிபர்கள் சீதாலட்சுமி , சங்கரசுப்பு, சிஎஸ்எம்எஸ் சங்கரசுப்பிரமணியன், ராஜ், சண்முகவேல், அனுசியா மாரிமுத்து, எஸ்ஆர்எல் வேணுகோபால், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கேஎஸ்எஸ் மாரியப்பன்,

கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி செல்வம், பள்ளி செயலாளர் ராஜேஷ் கண்ணா, தொழிலதிபர்கள் திவ்யா ரெங்கன், வாழைக்காய் துரைபாண்டியன், சரஸ்வதி கபே சின்னச்சாமி, தங்கவிலாஸ் ராஜேஷ்மாரிசெல்வம், திமுக முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் முனியசாமி, அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், தனபால், டாக்டர்கள் பரமசிவன், மகாலட்சுமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, கணேசராமகிருஷ்ணன், பிஜேபி மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரசிந்தாமணி,

ஓய்வு பெற்ற தபால் அலுவலர் பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற விஏஓ சேது, ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், வீரமணிகண்டன், ஜெயக்குமார் , பாலாஜி, ஜான்சன், ரமேஷ், சபரிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருநாள் வியாழக்கிழமை நாளை மறுநாள் நடைபெற உள்ளதால் சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.