டெல்லி: ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு பணி நியமனங்கள் தொடர்பான வழக்கில் சிபிஐ அமைப்பை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள்..? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரிக்கை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு பணி நியமனத்துக்கு முறைகேடு எழுந்த புகார் தொடர்பாக 2024 செப்.ல் சிபிஐ விசாரிக்கை ஐகோர்ட் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2024 நவம்பரில் இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடை அமலில் உள்ள நிலையில் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
சிபிஐ மனு விசாரணைக்கு வந்தபோது அரசு எந்திரத்தை அரசியல் மோதல்களுக்கான ஏன் பயன்படுத்துகிறீர்கள்.? பல முறை எச்சரித்து விட்டோம் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர்க்கு தலைமை நீதிபதி கவாய் கண்டித்தார். டாஸ்மாக், கர்நாடக அரசின் முடா வழக்கிலும் அண்மையில் உச்சநீதிமன்றம் ED, சிபிஐக்கு இதே போன்று கேள்வி எழுப்பியிருந்தது. ஹேமந்த் சோரன் அரசுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளது.


