சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்தது. அடுத்த மாதம் கட்சியின் மாநாடு, மதுரையில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை இன்று (ஜூலை 30) வெளியிடுகிறார் விஜய். பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கும் என தெரிகிறது.


