தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சியின் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லனை, தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் முடிந்து மாநில நிர்வாகிகள் புறப்படும் நேரத்தில் தவெக தொண்டர்கள் மாநில நிர்வாகி நிர்மல்குமாரிடம் செல்பி எடுக்க முந்தியடித்தது அப்பகுதியில் சிறிது நேரம் கூட்ட நெரிசல் எற்பட்டத்துடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


