தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி கல்லூரியில் ஏ.சி. வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
சென்னை : தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி கல்லூரியில் ஏ.சி. வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.174 கோடியில் 19 புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர், தலைமை செயலகத்தில் காணொளி மூலம் திறந்து வைத்தார். ரூ.51 கோடியில் கல்விசார் கட்டடங்களையும் இன்று திறந்து வைத்தார். நெல்லை மானூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டடம் ,வால்பாறையில் சிங்காரவேலர் ஓய்வு இல்லமும் திறந்து வைக்கப்பட்டது.