Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜயகாந்த் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரேமலதா நன்றி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் ”இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே” என்ற கொள்கைப்படி அன்னதானம் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் தந்து, கட்சி கொடியேற்றி, பேனர்கள் அமைத்து வறுமை ஒழிப்பு தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய தேமுதிகவினர் அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச்.ராஜா, சரத்குமார், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், சசிகலா, நடிகர்கள் தியாகு, தாடி பாலாஜி, கூல் சுரேஷ், திரைப்பட தயாரிப்பாளர் டி.சிவா, சௌந்தர்ராஜா மற்றும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த திரைப்பட இயக்குனர் விக்ரமன், சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் தேமுதிகவினர், பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.