சென்னை: தஞ்சை மாவட்டத்தில் 2.24 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மேலும் 50,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சையில் 2024ல் 1.28 லட்சம் மெ.டன் கொள்முதல் ஆன நிலையில் தற்போது 86,000 மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44,286 விவசாயிகளுக்கு ரூ.541 கோடி ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்னும் 10 நாளில் நெல் கொள்முதல் பணிகள் நிறைவடையும் என நுகர்பொருள் வாணிப கழகம்தகவல் தெரிவித்தது.
+
Advertisement
