*பிரகாஷ் எம்எல்ஏ வழங்கினார்
தேன்கனிக்கோட்டை : தளியில், திமுக உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட பிடிஏ முகவர்களுக்கு பிரகாஷ் எம்எல்ஏ பரிசு வழங்கினார்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தளி தெற்கு ஒன்றியத்தில் 70 வாக்குச்சாவடிகளில் தலைமை அறிவித்த 40 சதவீத இலக்கை முடித்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட பிடிஏ முகவர்கள் 70 பேருக்கு தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் சார்பில் டேப் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு முகவர்களுக்கு டேப் மற்றும் சுவர் கடிகாரம் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர், தளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ், பொறுப்பாளர் எல்லோரா மணி, துணை செயலாளர்கள் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.