கொல்கத்தா: மேற்கு வங்கம், வடக்கு 24 பர்கானாஸ், கார்தாவை சேர்ந்த தொழிலதிபர் வினோத் குப்தா. இவர் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 900 முறை தாய்லாந்தில் உள்ள பாங்காக்கு சென்றுள்ளார். இது குறித்த விவரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன. இதையடுத்து கார்தாவில் உள்ள வினோத் குப்தாவின் வீடு,அலுவலகம் மற்றும் கொல்கத்தா, நாடியா மாவட்டங்களில் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் இரவு சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.
அதிகாரி கூறுகையில், இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொழிலதிபர் நறுமண பொருட்களை வியாபாரம் செய்து வருவதாக கூறினார். வியாபார விஷயமாக தான் பாங்காக் சென்றதாக தொழிலதிபர் கூறியதாக தெரிவித்தார். தொழிலதிபரின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் குறித்து விசாரணை நடத்தப்படும். மேலும் போலி போஸ்போர்ட் கும்பலுடன் தொழிலதிபருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி தெரிவித்தார்.
