Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.12 கோடி மதிப்பு ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

சென்னை: தாய்லாந்திலிருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை ஏர்இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சுற்றுலா பயணிகளாக தாய்லாந்துக்கு சென்று விட்டு திரும்பிய வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண், 28 வயது இளைஞர் சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, உடைமைகளை சோதனையிட்டனர்.

டிராலி டைப் சூட் கேஸ்களின் அடிப்பாகத்தில் ரகசிய அறைகள் இருந்தன. அதை திறந்து பார்த்த போது, அதனுள் ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பார்சல்கள் வைத்திருந்தனர். இரண்டு பயணிகளின் சூட்கேஸ்களிலும் மொத்தம் 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து, ரூ.12 கோடி மதிப்புடைய 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல் பயணிகள் இரண்டு பேர் இடமும், மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது போதை கடத்தும் கும்பல், இவர்கள் இருவரையும் தாய்லாந்து நாட்டிற்கு, விமானத்தில் அனுப்பி அங்கிருந்து, இவர்கள் மூலமாக இந்த கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது என்று தெரிய வந்தது. இவர்கள் போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் கூலிக்காக வேலை செய்பவர்கள் என்றும் தெரிந்தது. எனவே இவர்களை இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய, கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களை கைது செய்ய, தீவிரமாக தேடி வருகின்றனர்.