தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணிக்காக ஆடிய ரிஷப் பண்ட், 24 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன் அடித்தார். இதனுடன் சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் 92 சிக்சர்கள் விளாசியுள்ள ரிஷப், அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 91 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்த வீரேந்தர் ஷேவாக் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தவிர, ரோகித் சர்மா (88 சிக்சர்) 3ம் இடத்திலும், ரவீந்திர ஜடேஜா (80 சிக்சர்) 4ம் இடத்திலும், எம்எஸ்.தோனி (78 சிக்சர்) 5ம் இடத்திலும் உள்ளனர்.
+
Advertisement


