Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓவலில் டெஸ்ட் மழையால் பாதிப்பு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

லண்டன்: ஓவலில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டி முடிந்து உள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளில் இரு அணிகளிலும் 4 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகி உள்ளார்.

இவருக்கு பதிலாக ஒல்லி போப் கேப்டனாக செயல்பட்டார். ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் டாவ்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஜேகப் பெத்தெல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஷ் டங் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். இந்திய அணியில் பும்ரா, ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் நீக்கப்பட்டு கருண் நாயார், ஜுரேல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்ேபாட்டியில் ஜெயித்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற முனைப்புடன் இந்தியாவும், வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரை வெல்லாம் என முனைப்புடன் இங்கிலாந்தும் களமிறங்கின.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, இந்திய அணியில் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அகிஸ்டன் பந்தில் எல்பிடபிள்யு முறையிலும், கேஎல் ராகுல் 14 ரன்னில் வோக்ஸ் பந்தில் போல்டாகியும் வெளியேறி ஏமாற்றத்தை தந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். 23 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன் இந்தியா எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கி நிலையில் 6 ஓவர் வீசப்பட்டது. 29 ஓவரில் 85 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய இழந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக டீ பிரேக்கிற்கு பின் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு முதல் நாள் ஆட்டம் தொடர்ந்தது. நிதனாமாக விளையாடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 38 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்திருந்தது. கருண் நாயர் 12 ரன், ஜடேஜா 2 ரன் எடுத்து களத்தில் இருந்தனர்.

* 5 போட்டிகளிலும் டாஸை இழந்த இந்தியா

ஷுப்மான் கில் இந்தத் தொடரில் முதல் 4 போட்டிகளிலும் டாஸை இழந்த நிலையில், 5வது போட்டியிலும் டாஸை பறிகொடுத்தார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 15 போட்டிகளில் டாஸை இழந்து உள்ளது.

* கணவன்-மனைவி இடையே சண்டையா? இதை பண்ணுங்க... தோனி அட்வைஸ் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களுக்கு அருகில் நின்றபடி மைக்கில் பேசிய தோனி, ‘திருமணம் என்பது நல்ல விஷயம். நீங்கள் அவசரப்பட்டு அதை செய்து கொண்டீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள். அவர்களில் மணமகனும் ஒருவர். எல்லோருமே இதே மாயபடகில்தான் இருக்கிறார்கள். நீங்கள் உலக கோப்பையை வென்றீர்களா, இல்லையா என்பது இங்கே முக்கியமில்லை. சண்டை வந்தால் அமைதியாக இருங்கள். ஆண்கள் 5 நிமிடத்தில் அமைதியாகிவிடுவார்கள். அவர்களின் சக்தி அவர்களுக்குத் தெரியும்’ என்றார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.