டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அதிரடி வீரர் ஜோ ரூட் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2, 3, 4வது இடங்களில் முறையே, நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஹாரி புரூக், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மாற்றமின்றி தொடர்கின்றனர்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஒரு நிலை உயர்ந்து 7ம் இடத்துக்கு சென்றுள்ளார். கடைசி போட்டிகளில் சொதப்பி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3 நிலை தாழ்ந்து 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்தின் பென் டக்கெட் 5 நிலை உயர்ந்து 10ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.