இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, 422 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில், கடந்த 1225 நாட்களாக நீடிக்கிறார்.
வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் மிராஸ், 305 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். இவர்கள் இடையே இமாலய வித்தியாசமாக, 117 புள்ளிகள் உள்ளன. இப்பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 3 நிலை உயர்ந்து 3ம் இடத்தை பிடித்துள்ளார். 4வது டெஸ்டில் சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர், 8 நிலை உயர்ந்து 14ம் இடத்தை பிடித்துள்ளார்.


