ஜம்மு: காஷ்மீரில் உள்ள கிஷ்த்துவார் மாவட்டம், சத்ரு என்ற இடத்தில் 3 தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு துறையின் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை அங்கு விரைந்து சென்றனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
+
Advertisement
