முக்கிய சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் ஒரே நாட்டிலிருந்துதான் தொடங்குகின்றன: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
நியூயார்க்: முக்கிய சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் ஒரே நாட்டிலிருந்துதான் தொடங்குகின்றன. சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர் என இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் உலகத் தலைவர்களிடம் கூறினார்.
நியூயார்க்கில் நடந்த 80வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆற்றிய உரையில்;
பயங்கரவாதத்தை ஒரு அரசுக் கொள்கையாக நாடுகள் வெளிப்படையாக அறிவிக்கும்போது, பயங்கரவாத மையங்கள் தொழில்துறை அளவில் செயல்படும்போது, பயங்கரவாதிகள் பகிரங்கமாக மகிமைப்படுத்தப்படும்போது, அத்தகைய செயல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்
சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியா இந்தச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக இருக்கும் அண்டை நாடு உள்ளது. பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டிலிருந்துதான் தொடங்குகின்றன. ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியல்கள் அந்த நாட்டினரால் நிரம்பியுள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. மேலும் பயங்கரவாத ஏற்பாட்டாளர்களையும், குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தியது என ஆப்ரேஷன் சிந்தூரை மேற்கோள்காட்டி, பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தானை கண்டித்தார்.