ஆந்திரா: வெடிமருந்துகள் பறிமுதல் வழக்கில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் ஆந்திராவின் ராயசூட்டி கோர்ட்டில் ஆஜரானார். தமிழ்நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக் அண்மையில் கைது செய்யப்பட்டார். 30 ஆண்டு தலைமறைவாக இருந்த அபுபக்கர் சித்திக்கை ராயசூட்டில் தமிழ்நாடு போலீசார் கைது செய்திருந்தனர். ஆந்திராவில் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அபுபக்கர் சித்திக்கை போலீசார் கைதுசெய்தனர். வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஆந்திர போலீஸ் தெரிவித்தது.
+
Advertisement