தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கு ஈடி சோதனையில் ரூ.3.70 கோடி பணம்,ரூ.6 கோடி தங்கம்,வெள்ளி பறிமுதல்
புதுடெல்லி: மகாராஷ்டிரா,தானே மாவட்டம், பட்கா கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் மூளை சலவை செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக இருந்த சாகிப் நாச்சன் என்ஐஏவால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாச்சன் உயிரிழந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 11ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் ரூ.3.70 கோடி பணம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வௌியிட்டுள்ள அறிக்கையில் நேற்று தெரிவித்துள்ளது.


