இழுவிசை கூரையிலான பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணி: அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் சிட்கோ அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் புதிய இழுவிசை கூரையிலான 5 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகளை இன்று (9.10.2025) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இன்று (9.10.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அடையாறு மண்டலம், வார்டு 168 ல், ஈக்காட்டுத்தாங்கல் 100 அடி சாலையில் இரண்டு பேருந்து நிறுத்தங்கள், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் ஒரு பேருந்து நிறுத்தம், வார்டு 172ல், கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிட்கோ அலுவலக சாலையில் 2 பேருந்து நிறுத்தங்கள் என இந்த இடங்களில் ஏற்கனவே உள்ள பேருந்து நிழற்குடைகளை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் ரூபாய் 5.93 கோடி மதிப்பீட்டில் இழுவிசை கூரையிலான 5 புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிறுத்தங்களின் வரைபடங்களைப் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர். துரைராஜ் (அடையாறு), எம்.கிருஷ்ணமூர்த்தி (கோடம்பாக்கம்), மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.